மங்கையரில் மகாராணி
பெண்ணே!
உன் கை பட்ட
அடுப்பறை
தீயாய் பேசும்
நீ மூட்டியத் தீயோ புகையாமல் பேசும்!
கையில்
மொக்க கத்தியும் கூர்மையோடு பேசும்
காய் கறி மொத்தமும்
மசிய பேசும்!
கண்ணீர் கசிய
வெங்காயம் நறுக்க
கறி குழம்போ வாய் மணக்க
உப்பு கரிக்காமல் பேசும்!
கொடி கம்பில் உலர்திடும் துணிகள் காற்றின் காதிலுரசி உன் திறனை அழுங்காமல் குழுங்காமல் பேசும்
வாசலில்
மா இலைத் தோரணம்
மாக் கோலம்
நீ மகராசியென சுவாரசியமாக பேசும்!
உன் சுவாத்தில் பூத்த தோட்டத்து மலர்கள் உன்னைப் போலே
பூத்து குலுங்கி தெய்வீகமாய் பேசும்
மகளாய் தாய் தந்தைக்கு உயிரானாய்
சகோதரியாய்
உடன் பிறப்புக்கு
பாசமலரானாய்!
ஊர் பேர் தெரியாத ஒருவருக்கு மனைவியானாய்
மறு வீட்டுத் தாய் தந்தைக்கு மறுமகளானாய்!
மன வாழ்வில்
புது உறவை
மனதில் ஏற்றாய்
இன்பத் துன்ப சுமையை சுகமாய்
ஏற்றாய்!
நீயும் தாயாகி தியாகி ஆனாய்
தரனி போற்றும்
மங்கையரில்
மகாராணியானாய்!
எழுதுவது : சி.ம.அபிமாலா
ஜொகூர்பாரு
மலேசியா