சிதம்பரா கணிதப்போட்டிப் பரீட்சை நாளை
வருடாவருடம் நடைபெறும் சிதம்பரா கணிதப்போட்டி மார்ச் மாதம் 12 ம்திகதி நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஐக்கிய இராச்சியத்திலிருந்து தாயகத்திலும் சமநேரத்தில் இடம்பெறும் இந்தப்போட்டிப்பரீட்சையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்குபற்றவுள்ளனர்.
தரம் 1 முதல் தரம் 10 வரையான மாணவர்கள் இந்த போட்டிப்பரீட்சையில் தோற்றவுள்ளனர். போட்டிப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் கணித அரங்கில் வெற்றிசின்னங்களுடன் கௌரவிக்கப்படுவார்கள்.
அத்துடன் தாயகத்தில் முன்னிலை பெறும் மாணவர்கள் ஐக்கிய இராச்சிய கணித விழா அரங்குக்கு அழைக்கப்படும் அதேவேளை கல்விச்சுற்றுலாவிற்கும் அழைத்துச்செல்லபடுவார்கள். கடந்த வருடம் கோவிட் பெருந்தொற்றுகாலத்தில் இணையவழி பரீட்சையாக இடம்பெற்ற இந்தப்போட்டிப்பரீட்சை இந்தவருடம் பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிப்பரீட்சையில் பங்குபற்றும் மாணவர்கள் தங்கள் பரீட்சை நிலையங்கள் எதுவென சரியாக உறுதிப்படுத்தி தமக்குரிய ஆவணங்களுடன் பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பரீட்சை நிலையங்களைப் பார்க்க கீழே அழுத்தவும்
முக்கியமாக இந்தப்பரீட்சையில் தாயகத்தில் பங்குபற்றும் மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக நடாத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.