மதிப் “பெண்”..
துளி நீர் ஏந்தி
உருவம் தந்து
குருதியை குழைத்து
பாலென கொடுத்து.
இணக்க மென்னும்
பாலம் அமைத்து
தேவைகள் யாவையும்
இயல்பாய் செய்து…
முயற்சிகளுக்கு
பயிற்சிகள் ஒன்றை
உழைப்புடன்
செய்யும் ஏணி ..
அயர்ச்சிகள் என்பதை
அண்டவிடாமல்
சுழற்சி முறையில்
சுற்றும் தோணி…
இரும்பை விஞ்சும்
வலிமை கொண்டு
இருளை அகற்றும்
ஒளியை போல..
எத்தனை எத்தனை
அவதாரங்கள்
சற்றும் அவளுக்கில்லை ஆரவாரங்கள் …
உள்ளம் முழுவதும்
வெல்லம் இனிமை
நன்னெறி திரியால்
எரியும் பதுமை..
மறு பிறப்பென்பது – இம்
மண்ணி லிருந்தால்
மரமாய்.. எறும்பாய்… புழுவானாலும்…
பெண்ணாக பிறந்திட ஆசை…. !!!
எழுதுவது : வெண்பா பாக்யா