கொலராடோவில் கடந்த வருடம் காட்டுத்தீ அழிந்த பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பரவிவருகிறது.
அமெரிக்காவின் வடக்குக் கொலராடோ பிராந்தியத்தில் Boulder என்ற நகரில் வேகமாகப் பரவிவரும் காட்டுத்தீயின் பிடியிலிருந்து தப்ப சுமார் 19,000 பேரைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினார்கள் மீட்புப்படை அதிகாரிகள். ஏற்கனவே சுமார் 50 ஏக்கர் பிராந்தியத்தைக் கவ்வியிருக்கும் காட்டுத்தீ கட்டுப்பாடின்றித் தொடர்ந்து பரவிவருவதாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேறிடங்களுக்கு மாற்றப்பட்டவர்கள் சுமார் 8,000 வீடுகளில் வாழ்பவர்களாகும். இதையடுத்த பிராந்தியத்தில் கடந்த வருடம் பரவிய காட்டுத்தீ சுமார் 1,000 வீடுகளை எரித்து அழித்திருந்தது. வான்வெளி ஆராய்ச்சி நிலையம் ஒன்றைக் கொண்ட Table Mesa என்ற பெயரிலான தேசிய பாதுகாப்புக்குட்படுத்தப்பட்ட வனப்பகுதியில் ஒரு பாகம் எரிந்துகொண்டிருக்கிறது. அது கொலராடோ நீர்வீழ்ச்சிப் பகுதியை நோக்கிப் பரவிவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சாள்ஸ் ஜெ.போமன்