கொலராடோவை அடுத்து வெர்ஜீனியாவின் வோல்மார்ட்டுக்குள் ஒரே சமயத்தில் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சுமார் மூன்று நாட்கள் இடைவெளிக்குள் மேலுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அமெரிக்கர்களை அதிர வைத்திருக்கிறது. செவ்வாயன்று இரவு பத்துமணிக்குப் பின்னர் வெர்ஜீனியா மாநிலத்தில்,  செசப்பீக் [Chesapeake] என்ற நகரில் நடந்த சம்பவமொன்றில் வோல்மார்ட் பல்பொருள் அங்காடியின் மேலாளர்களில் ஒருவர் அங்கேயிருந்தவர்களைத் துப்பாக்கியால் கண்டபடி சுட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

சுமார் 10 பேராவது அந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் துப்பாக்கியால் சுட்டவரும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாக பொலீசார் தெரிவிக்கின்றனர். அதைத் தவிர வேறு சிலர் காயப்பட்டிருக்கிறார்கள். முழு விபரங்களும் இன்னும் தெரியவில்லை என்று குறிப்பிடும் பொலீசாரின் செய்தி ஐந்து பேர் அருகேயிருக்கும் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறது.

சனிக்கிழமையன்று இரவு கொலராடோவில் ஒரு இரவுக் கேளிக்கை மண்டபத்தில் தாறுமாறாக ஒருவன் சுட்டதில் 5 பேர் இறந்திருக்கிறார்கள். Club Q  என்றழைக்கப்படும் அந்தக் கேளிக்கை மண்டபம் ஓரினச் சேர்க்கையாளர்களிடையே பிரபலமானது. துப்பாக்கிச் சூட்டால் 18 பேர் காயமடைந்திருந்தார்கள்.

அங்கே துப்பாக்கியால் சுட்ட 22 வயதான ஒருவனை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பொலீசாரிடம் கையளித்து அவன் கைது செய்யப்பட்டான். காயமடைந்திருந்த அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனது நடத்தைக்குக் காரணம் அவன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் மீது வெறுப்புக் கொண்டவன் என்பதால் என்று பின்னர் வந்த விபரங்களிலிருந்து தெரியவந்தது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *