கவிஞர் அம்பி விடைபெற்றார்

குழந்தைகளைச் சார்ந்த பல ஈழத்தின் படைப்புக்களால்  உலகளவில் பேசப்படும் இலக்கிய ஆளுமை கவிஞர் அம்பி  அவர்கள் விடைபெற்றார்.

அவுஸ்ரேலியாவின் சிட்னியில் வாழ்ந்து வந்த திரு அம்பிகைபாகர் அவர்கள் தனது 95 வயதில் இவ்வுலகை நீத்துள்ளார்.


ஈழத்தின் இலக்கிய ,நாடகத்துறை ஆளுமையாக உலகத்தமிழர்கள் மத்தியில் அறியப்பட்ட திரு அம்பிகைபாகர் அவர்கள், பல விருதுகளைப்பெற்ற பெருமைக்குரியவர் ஆவார்.
குறிப்பாக இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் முக்கிய அம்சமாக உலகளவில் அறிஞர் அண்ணா பெயரால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் , முதலிடம் பெற்று , மக்கள் திலகம் M.G. ராமச்சந்திரன் அவர்களால் தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர் என்பது மிக முக்கியமானதாகும்.


நாடகத்துறையிலும் பல பரிணாமங்களை தொட்டவர்.
அமரர் அம்பி அவர்களின் கவிதை நாடகங்கள், பல தளங்களில் பேசப்பட்டவையாகும்.


தனது பூரணத்துவமான வாழ்வில் கவிஞர் அம்பி என்ற திரு அம்பிகைபாகர் அவர்கள் விடைபெற்றாலும் ஈழத்தின் இலக்கியத்துறைக்கு மிகவும் பேரிழப்பு என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *