அவுஸ்ரேலியா அயர்லாந்தை வென்றது | t20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண இன்றைய போட்டியில் அயர்லாந்தை அவுஸ்ரேலாயா 42 ஓட்டங்களால் வெற்றிகொண்டது.

நாணயச்சுழற்சியில் வெற்றிகொண்ட அயர்லாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி முன்னதாக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி மிக உறுதியான துடுப்பெடுத்தாட்டத்தை வெளிப்படுத்தி 5விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 179 ஓட்டங்களைக் குவித்தது.

அணித்தலைவர் Aron Finch 44 பந்துகளில் குவித்த 63 ஓட்டங்கள் மற்றும் Marcus Stoinis 25 பந்துகளில் எடுத்த 35 ஓட்டங்கள் ஆகக்கூடிய ஓட்ட எண்ணிக்கைகள் ஆகும்.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி ஆரம்ப விக்கெட்டுக்கள் மள மள என்று சரிய வேகத்துடுப்பாட்டம் அவுஸ்ரேலியாவால் கட்டுப்படுத்தப்பட்டது. நிறைவில் அயர்லாந்து அணி 18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அயர்லாந்து அணியின் சார்பில் Lorcan Tucker 48 பந்துகளில் ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை குவித்தது இன்றைய போட்டியில் மிகச்சிறந்த ஓட் எண்ணிக்கையானது.

அதன்படி அவுஸ்ரேலியா T20 வெற்றிக்கிண்ணப்போட்டிகளில் தன் இரண்டாவது வெற்றியைப்பதிவு செய்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்ரேலிய அணியின் அணித்தலைவர் Aron Finch அறிவிக்கப்பட்டார்.

இதன்படி இன்றைய போட்டியின் நிறைவோடு புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளோடு இரண்டாம் நிலையில் தன்னை நிலைப்படுத்தியுள்ளது அவுஸ்ரேலிய அணி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *