சர்வதேச கத்தோலிக்க மனிதாபிமான அமைப்பின் நிர்வாகிகள் அனைவரையும் வீட்டுக்கனுப்பினார் பாப்பரசர்.

உலகின் 200 நாடுகளில் செயற்படும் கத்தோலிக்க மனிதாபிமான உதவிகள் அமைப்பான கரிட்டாஸின் [Caritas Internationalis]  நிர்வாகிகள் ஒரேயடியாக பாப்பரசரால் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். அந்த நிர்வாகக் குழுவினரின் செயல்களில் காணப்பட்ட ஒழுங்கீனங்கள், தமக்குக்கீழே பதவியாற்றுகிறவர்களை இடைஞ்சல் செய்தல் போன்றவைக்காகவே அந்த முடிவைப் பாப்பரசர் எடுத்ததாகக் காரணம் வெளியிடப்பட்டிருக்கிறது.

வத்திக்கானிலிருந்து இயக்கப்படும் கத்தோலிக்க திருச்சபையின் கரிட்டாஸ் அமைப்பு உலகெங்கும் 163 உப அமைப்புக்களின் தலைமையகமாகும். அதன் கீழ் மில்லியனுக்கும் அதிகமானோர் வெவ்வேறு மட்டங்களில் பணியாற்றி வருகிறார்கள். அமைப்பின் நிர்வாகத் தலைவராக இரண்டாவது தவணை இருந்த லூயிஸ் அந்தோனியோ தெக்லே உட்பட அவரது உயர்மட்ட சகாக்கள் அனைவரும் தமது பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.

“பொருளாதார நிதிகள் கையாடப்படுவதாகவோ, பாலியல் சம்பந்தப்பட்ட குற்றங்கள் நடந்ததாகவோ அறியப்படவில்லை. ஆனால், மற்றும் பல தவறான வழிகள் அந்தத் தலைமைக் குழுவினரால் கையாளப்படுவதாலேயே அவர்கள் நீக்கப்படுகிறார்கள்,” என்று வத்திக்கான் அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அமைப்பை நிர்வாகிக்க தனியார் நிர்வாக நிறுவனம் ஒன்றைத் தற்காலிகமாக நியமித்திருக்கிறார் பாப்பரசர் பிரான்சீஸ்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *