‘ஜோன்சன்’ வைரஸ் தடுப்பூசியை இடைநிறுத்துமாறு ஆலோசனை.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் ஒன்றான ‘ஜோன்சன் அன் ஜோன்சன்’ (Johnson & Johnson) தடுப்பூசி ஏற்று வதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் கேட்டிருக்கிறது.

‘ஜோன்சன்’ தடுப்பூசி ஏற்றத் தொடங்கிய பின்னர் கடந்த இரண்டு வார காலத்தில் ஆறு பேருக்கு இரத்தம் உறைதல் சம்பந்தமான பக்க விளைவுகள் ஏற்பட்டதை அடுத்தே ஊசியின் பாவனையை இடைநிறுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஆறுபேரும் 18-48 வயதுக்குட்பட்ட பெண்கள். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் சுமார் ஏழு மில்லியன் பேருக்கு இதுவரை ‘ஜோன்சன்’ தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஒன்பது மில்லியன் புட்டிகள் அமெரிக்காவுக்கு வெளியே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்ற ‘நியுயோர்க் ரைம்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.

“தடுப்பூசியின் பாவனையை இடைநிறுத் துமாறு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பரிந்துரை செய்கிறோம்” என்று உணவு, மருந்து கட்டுப்பாட்டு மருத்துவ நிபுணர்கள் கூட்டாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஒக்ஸ்போர்ட் தயாரிப்பான அஸ்ராஸெ னகா தடுப்பூசியைத் தொடர்ந்து அடுத் ததாக அமெரிக்காவின் ஜோன்சன் தடுப்பூசி தொடர்பாகவும் எச்சரிக்கைகள் வெளியாகுவது உலகெங்கும் வைரஸ் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளைக் குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இரத்தக்கட்டிகள் தொடர்பான அறிக்கை களை அடுத்து ஐரோப்பாவுக்கான தனது தடுப்பூசி விநியோகத்தை ஜோன்சன் நிறுவனம் தாமதப்படுத்தி உள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *