போனின் தீவுகளில் நிலநடுக்கம் பதிவு..!

ஜப்பானின் போனின் தீவுகளில் இன்றைய தினம் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

டோக்கியோவில் இருந்து 1000 கி.மீ தொலைவில் இருக்க கூடிய போனின் தீவுகளிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இது ரிச்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலநடுக்கத்தின் காரமாக ஏற்பட்ட அதிர்வு மத்திய டோக்கியோ வரை உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *