ஞாயிறன்று பாப்பரசரால் வத்திக்கானில் தேவசகாயம் பிள்ளை புனிதராக அறிவிக்கப்படுவார்.
மே 15 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் புனித பேதுரு தேவாலயத்தில் நடக்கவிருக்கும் புனித சேவையின்போது கன்யாகுமரியைச் சேர்ந்த தேவசகாயம் பிள்ளை புனிதராக நியமனம் செய்யப்படவிருக்கிறார். பாப்பரசர் பிரான்சிஸ் நடத்தும் அந்தச் சேவையின் போது மேலும் ஒன்பது பேர் கத்தோலிக்க மார்க்கப் புனிதர்களாக நியமிக்கப்படுவார்கள்.
2012 இல் தேவசகாயம் பிறந்து 300 வருடங்களின் பின்னர் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவராகத் தெரிவுசெய்யப்பட்டார். கத்தோலிக்க மார்க்கத்தின் புனிதர் நியமனத்துக்கான முதலாவது படி அதுவாகும். கேரளாவைச் சேர்ந்த நால்வர் ஏற்கனவே கத்தோலிக்க மார்க்கப் புனிதர்களாக நியமனம் பெற்றிருக்கிறார்கள்.
18 ம் நூற்றாண்டில் கன்யாகுமரியானது கேரளாவின் ஒரு பகுதியாக இருக்கும் சமயத்தில் இந்து சமயத்தில் பிறந்து கத்தோலிக்கராக மாறியவர் தேவசகாயம் பிள்ளை. அவருடன் தொடர்புடைய மறை மாவட்டத்தில் அதையொட்டிப் பிரத்தியேக கத்தோலிக்க சேவைகள் நடைபெறும்.
கேரளாவில் நெய்யாத்திங்கரா மறைமாவட்டத்தில் தேவசகாயம் பிள்ளையின் பெயரில் கட்டப்பட்டிருக்கும் தேவாலயத்திலும், பாளயம் நகரின் தேவாலயமொன்றிலும் நாளை பிரத்தியேக கத்தோலிக்க சேவைகள் நடைபெறவிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்