டெக்சாஸ் மாநிலத்தில் 19 குழந்தைகளைச் சுட்டுக் கொன்றான் 18 வயதுக்காரன்!

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரிலிருக்கும் யுவால்டி என்ற நகரின் ஆரம்பப் பாடசாலைக்குச் சென்று தாறுமாறாகச் சுட்டுத் தள்ளினான் ஒரு 18 வயது இளைஞன். துப்பாக்கிச் சூட்டால் இறந்தவர்கள் 19 குழந்தைகளும் 3 வயதுக்கு வந்தவர்களுமாகும். அதையடுத்து தேசியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றிய ஜனாதிபதி ஜோ பைடன் ஆயுதத்தாலான வன்முறையைக் கண்டித்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவன் அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது துப்பாக்கிச் சூட்டுக்காளானவர்கலில் இருவர் பொலீசார். அவர்களுடைய காயங்கள் மோசமானவை அல்ல. ஒரு 10 வயதுச் சிறுமியும், 66 வயதான மாதும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி உயிர்காக்கும் மருத்துவ உதவிகள் பெற்று வருகிறார்கள். 

ஆரம்பப் பள்ளிக்குச் சென்று 500 மாணவர்களிடையே கண்டபடி சுட ஆரம்பிக்க முன்னர் வீட்டில் தனது பாட்டி ஒருத்தரையும் 18 வயதுக்காரன் சுட்டுக் கொன்றுவிட்டான். பாடசாலையின் பெரும்பாலான மாணவர்கள் ஸ்பானிஷ் மொழிக்காரர்களாகும். 

உலகில் பெரும் முன்னேற்றமடைந்த நாடான அமெரிக்காவின் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் ஆயுத வன்முறைகள் சமீப வருடங்களில் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன. துப்பாக்கிகளைக் கொள்வனவு செய்தல் இலகுவாக இருப்பதால் வெவ்வேறு காரணங்களுக்காக அகப்பட்ட ஆயுதத்தால் கண்டபடி சுட்டுத் தள்ளுகிறவர்களின் நடவடிக்கைகளும் அவ்வப்போது நடந்து நாட்டை அதிர வைக்கின்றன.

டெக்சாஸில் நடந்திருக்கும் ஆரம்பப் பாடசாலைக் கொலைகளை அடுத்தும் வழக்கம்போல நாட்டின் ஆயுத வன்முறைக் கலாச்சாரம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் எழுந்திருக்கின்றன. செனட் சபையில் தனது கட்சிக்கு மூன்றிலொரு விகிதப் பலம் இல்லாததால் கடுமையான சட்டங்கள் கொண்டுவந்து நாட்டின் ஆயுதக் கொள்வனவுச் சட்டங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஜனாதிபதி ஜோ பைடன் வருத்தம் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *