விட்டமின் டி-ஐப் பெருமளவில் கொண்டிருக்கும் மரபணு மாற்றப்பட்ட தக்காளிகள் விரைவில் சந்தைக்கு வரும்!
உலகளவில் ஒரு பில்லியன் பேர் விட்டமின் டி போதாமையால் வெவ்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஐரோப்பாவின் மக்கள் தொகையில் 40 % பேருக்கு அந்தப் போதாமை இருக்கிறது. அதைத் தீர்க்கும் ஒரு தீர்வாக மரபணு மாற்றப்பட்ட புதிய தக்காளி வகையொன்று ஐக்கிய ராச்சியத்தின் நோர்விச் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பெருமளவில் பயிரிடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுவிட்டதால் விரைவில் அது சந்தைக்கு வரும்.
குறிப்பிட்ட தக்காளி இனத்தில் செய்யப்படும் ஒரு மாறுதலால் அது மேலதிக டி விட்டமினைத் தயாரிப்பது மட்டுமன்றிச் சாதாரணமான தக்காளியிலிருக்கும் ஆரோக்கியத்தைக் குறைக்கவல்ல டொமாட்டீன் என்ற இரசாயணத்தின் அளவையும் குறைக்கிறது. இப்படியான மாறுதல்களைப் பச்சைக்கறிவகைகளில் செய்தல் உணவுச் சேதாரத்தையும் குறைக்கும் மனோநிலையை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது.
ஐக்கிய ராச்சியத்தில் வாழ்பவர்களைப் பொறுத்தவரை இந்த வகைத் தக்காளியில் இரண்டைச் சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு தற்போதைய சமயத்தில் குறைபாடாக இருக்கும் விட்டமின் டி-ஐப் பெற்றுக்கொள்ளலாம் என்கிறார் ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் கத்தரின் மார்டின்.
சாள்ஸ் ஜெ. போமன்