கல்யாணவீட்டுக்கு போன படகு கவிழ்ந்த சோகம்

யேமனில் கல்யாண வீட்டுக்குச்  சென்றுகொண்டிருந்த படகு ஒன்று கவிழ்ந்ததில்  அதில் பயணம் செய்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

யேமனின் வடமேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் அமைந்துள்ள  ஹொடைடா துறைமுக நகர பகுதியிலேயே குறித்த  படகு விபத்து  இடம்பெற்றுள்ளது.

குறித்த படகு கல்யாண விழாவில் கலந்து கொள்வதற்காக யேமனின் அல்லுஹேயாவிலிருந்து செங்கடலில் உள்ள மிகப்பெரிய யேமன் தீவான கமரன் தீவுக்குச் சென்று கொண்டிருந்ததாக விபத்து  விசாரணை நடாத்தும்  அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த கல்யாண வீட்டு நிகழ்வுக்கு 27 பேர் பயணம் செய்த போது  திடீரென படகு நீரில் கவிழ்ந்ததில்  21 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில்  12 பெண்கள், 7 சிறுவர்கள் உள்ளடங்குவர் என குறிப்பிடப்படுகிறது.

கடலில் வீசிய பலத்த காற்றினால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *