வடக்கில் கல்லூரிகளின் சமர்| ஹாட்லி எதிர் நெல்லியடி மத்தி மோதும் உதைபந்தாட்டம்.
கல்லூரிகளின் சமர் என வர்ணிக்கப்படும் வடக்கின் மிகப்பெரும் உதைபந்தாட்டப் போட்டி இந்தவருடம் முதன்முதலாக வடமராட்சியில் துவங்குகிறது.
இரட்ணசபாபதி ஞாபகார்த்தமாக இடம்பெறும் இந்த உதைபந்தாட்ட போட்டியில் வடமராட்சியின் பிரபலமான கல்லூரிகளான ஹாட்லி கல்லூரியும் ,நெல்லியடி மத்திய கல்லூரியும் களமிறங்கவுள்ளன.
மாகாண மற்றும் அகில இலங்கை ரீதியாக பலவருடங்களாக திறமைகளை வெளிப்படுத்தும் பலம் பொருந்திய இந்த இரு கல்லூரி அணிகளுக்குமிடையிலான இந்த உதைபந்தாட்ட சமர் பார்ப்பவர் பலருக்கும் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்வுகூறப்படுகிறது.
வரும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் குறித்த உதைபந்தாட்டப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதல் கல்லூரிகளின் சமர் நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திரு. சிவகொழுந்து சிறிசற்குணராஜா அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக யா/ஹாட்லி கல்லூரி அதிபர் திரு. கலைசெல்வன் அவர்களும் மற்றும் யா/நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்த பிரமாண்டமான கல்லூரிகளின் சமரில் பங்குபற்ற களமிறங்கும் கல்லூரி வீரர்களை உற்சாகப்படுத்தவும், அணிகளுக்கிடையிலான மோதலை பார்வையிட்டு மகிழவும் அனைவரையும் அழைக்கிறார்கள் ஒருங்கிணைப்பாளர்கள்.
எழுதுவது : ரூபி