பிரித்தானியாவில் மன்னார் மக்களின் தமிழர் விளையாட்டு விழா.

புலம்பெயர் தமிழர் விளையாட்டு விழாக்களில் ஒன்றான மன்னார் நலன்புரிச்சங்கம்-ஐக்கிய இராச்சியம் நடாத்தும் மன்னார் விளையாட்டு விழா, இந்த வருடமும் மிகச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

வங்கி விடுமுறை தினமான மே மாதம் 8 ஆம் திகதி 2023 அன்று Wimbledon Commons Extension, Robinhood Way, London, SW15 3QF மைதானத்தில் காலை 8.00 மணியிலிருந்து மாலை 8.00 மணி வரை நடைபெறவுள்ளதாயக அறிவிக்கப்பட்டுள்ளது

இங்கு முக்கியமாக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் ( Football), கரப்பந்தாட்ட போட்டிகள் ( Volleyball), மற்றும் மென்பந்து துடுப்பாட்டம் (Cricket softball), வலைப்பந்து (Netball), சிறுவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகள் ( Athletics for children), மற்றும் சுவாரஸ்யமான பல நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல தரப்பட்ட வயதினரும் கலந்து கொள்ளமுடியும்.

ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லையென சிறுவர் முதல் பெரியவர்கள் வரை களமிறங்கப்போகும் இந்த போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்றும் இச்சுற்றுப்போட்டிகளில் வெற்றிபெறுவோரை ஊக்குவிக்கும் வகையில் பணப்பரிசுகளும் வழங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் வெகுவிமரிசையாக நடக்கவிருக்கும் இவ் விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு மென்மேலும் எங்கள் தமிழ் மக்களின் நிகழ்வுகள் சிறப்பாக அமைய ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்பப்படுகின்றது.

எழுதுவது ; நகீரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *