யார் கொடுத்தார் உரிமை?

பெண் குழந்தைகளும்
தட்காலமும்……. ❗

பிரசவத்தின் பின்னே
பெண் குழந்தை
கள்ளி ப்பால் குடித்து
உயிர் பறித்த கற்காலம்
பெண்
பிரசவிக்கும் முன்னே
கருவறையில் உயிர் பறிக்கும்
இக்காலம் ❗

ஐந்து பெண் பெற்றால்
அரசனும் ஆண்டியாவான்
அன்று சொன்னது
அச்சு பிசகாமல்
இன்றும் பொருந்துதல்லவா….. ❓
பொறுப்பற்ற சமூகத்தின்
சீர்வரிசை அரங்கேற்றம்… ❗

போக்குவரத்தில்
பெருந்தும்பம்
மாதாந்தம் குருதிச் சுற்றி கரிப்பு
தீட்டு
தீண்டாமை
திட்டமிட்ட வன்கொடுமை
திட்டி தீர்க்க
அவள் யார் வீட்டு அடிமை…. ❓

ஆக்கி அவித்து
அடுபப்டியில்
அடிபணிந்து கிடக்க
ஆளாளுக்கோர் சட்டம் வகுத்து
அவளை ஆட்டிப்படைக்க
யாருக்கு யார் கொடுத்தார் உரிமை ?

அரைகுறை ஆடையில்
அலங்காரித்து
விளம்பர மேடை ஏற்றி
விபச்சாரி பட்டம் கொடுத்து
வியாபாரமாகுவாதும் கொடுமை ❗

அன்று முதல்
இன்று வரை
பெண்ணியம் பேசுகின்ற
புண்ணியவான்களே….. ❗
பொறுத்தது போதுமென்று
பெண்
பொங்கி எழுந்தால்
உங்கள் கண்ணியம் என்னாவது ❓

படித்து. பட்டம் வாங்கி
நாட்குனத்தில்
படை கொண்டு நடத்தி
நாடாண்டு
நல்ல வரலாறு படைக்க
பென்னுக்கும்
திறமை உண்டென்ற
உண்மை உணர்வதேப்போ…. ❓

அ. அ. நவாஸ்
வவுனியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *