இப்படி வாழ தான் ஆசை..!


🌈 வானவில் வீடு 🌈


வானவில்லால்
வீடுகட்டி … அதில்
வெண்ணிலவால்
விளக்கேற்றி …
நட்சத்திரங்களால்
அலங்கரித்து …
ஒரு பகட்டு வாழ்க்கை
வாழத்தான் ஆசை …

ஓலைக் கூரையின்
ஓட்டையின்
வழியே …
கதிரவன் கரம்
தீண்டி கலைந்து
போனது என்
பகல் கனவு …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *