ரஷ்யாவிற்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவிப்பு..!
ரஷ்யா உக்ரைன் போரானது 2022 ம் ஆண்டிலிருந்து நடைப்பெற்று வருகிறது. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே வடகொரியாவானது ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த மாதம் 1 ம் திகதி முதல் 7 ம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் வடகொரியாவானது ஆயுதங்களை கொண்டு சென்று ரஷ்யாவிற்கு ஒப்படைத்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை இது தொடர்பாக செயற்கை கோள் புகைப்படங்களையும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியா ரஷ்யா இடையேயான ஆயுத விற்பனைக்கு எதிராக நாங்கள் முன்பே தடைகளை விதித்திருக்கிறோம்.தேவை ஏற்படின் மேலதிக தடைகளையும் விதிக்க தயங்கமாட்டோம் என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ரஷ்யாவிற்கு வடகொரியா ஆயுதங்களை வழங்கியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.