மலையக மறுமலர்ச்சி ஒன்றியம் hack செய்யப்பட்டுள்ளது.
மலையகத்தின் பல்வேறு அம்சங்களையும்,கலை நிகழ்வுகளையும் ,சமூக சேவைகளையும் வழங்குவதற்காக ஆசிரயர் R.G.கிருஷ்ணாவால் கட்டி எழுப்பபட்ட முகப்புத்தக குழு தான் மலையக மறு மலர்ச்சி ஒன்றியம்.
இதில் 69k உறுபினர்களை கொண்டு மிக சிறப்பாக இயங்கி வந்தது. இதன் சேவைகள் ஏராளம்,பல இடர் பாடுகளின் போது மலையக மக்களுக்கு கை கொடுத்த குழு .மற்றும் பல நூலகங்களை உருவாக்கி மலையக பகுதி இளைஞர் யுவதிகளின் வாழ்க்கை மாற்றிய குழு.இவ்வாறான செயற் பாடுகளை செய்து வளர்ச்சிபடியில் சென்றுக்கொண்டிருக்கிறது.
எந்த விதமான அரசியல் பிண்ணனியும் இல்லாமல் ,பக்க சார்பின்றி மலையக மக்களின் வளர்ச்சிக்காக மாத்திரமே இக்குழுவானது செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற வேளையில், சில விஷமிகளால் இக்குழுவானது hack செய்யப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளதாக மலையக மறுமலர்ச்சி ஒன்றியத்தின் ஸ்தாபகர் RG.கிருஷ்ண தெரிவித்துள்ளார்.
எவ்வளவு தான் தங்களை அழிக்க நினைத்தாலும் ப்னிக்ஸ் பறவையாய் மீண்டும் எழுவோம் என தெரிவித்துள்ளார்.