மருத்துவம் எதனை ஆளுகிறது..!
இங்கே மக்களை மக்களாக … ஒரு வாழும் உயிராகவாவது யார் நினைத்தார்கள் … முன்னே மன்னர்கள் ஆட்சிலாவது இதயம் கசிந்து அன்பும் , அருளும் , கருணையும்
நிறைந்த நல்ல இதயங்கள் பல துடித்தது இயற்கையோடு இயற்கையாக …!
ஆனால் இன்றோ மக்களே தேர்ந்தெடுத்த ஆட்சி …?
இங்கே எல்லாமுமே விற்பனைப் பொருள் …
ஆணுக்குப் பெண் தேவையெனில் அதற்கும் காசு இருந்தால் போதும் வயது பற்றிக் கவலையில்லை …
எல்லாம் காசு …!
ஒரு நொடியைக் கூட
காசு வருவமானம் ஏதேனும் இருந்தால் என்னிடம் பேசு இல்லையேல் பேசாதே எனும் நிலை …!
இங்கே அதனால் முதலில் மண் கெட்டது …!
ஆரோக்கியமான உணவுகள் கெட்டது …!
அதனால் உடல் கெட்டது …
கெட்டதை விதைத்து
நல்லதைச் செய்வேன் என்பவனும் …!
விஷத்தை முறிக்க …
வேறொரு விஷத்தையே …
மருத்துவம் எனும் பெயரில் கொடுத்து அவனவன் தன்னை வளர்த்துக் கொண்டதுதான் மிச்சம்!
இந்த உலகம் இதயம் இழந்த இயந்திரங்களாகிப் போனது …!
ஆனால் எந்தெந்தப் பேராசையும் நிறைவடையாத வலியோடேயே …!
பற்பல உயிர்கள் ஏக்கத்துடனேயே மடிகிறது …!
கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052