இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையிலான போர் நிறுத்ததை ஏற்படுத்த ஐ.நா வில் சட்டம் நிறைவேற்றம் …!
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது எலலையற்ற தாக்குதலை நடாத்தி வருகிறது. இதன் காரணமாக பல உயிர்கள் உயிரிழந்தும்,பலர் தமது உடைமைகளை இழந்தும்.பலர் அனாதையாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உடனடியாக இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையில போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துளளது.
இதற்கமைய ஜோர்தானால் முன்வைக்கப்பட்ட ‘உடனடி போர்நிறுத்த நீடித்த மனிதபிமான திட்டத்திற்கு’120 நாடுகள் ஆதரவாகவும்,14 நாடுகள் எதிராகவும்,45 நாடுகள் வாக்களிக்காமலும் தவிர்த்தன.
இதற்கமைய பல நாடுகள் போரால் பாதிப்படைந்த மக்களுக்கு உடனடி சேவைகளை வழங்கவும்,அமைதியை நிலை நாட்டவும் முனவந்துள்ளமை விசேட அம்சமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.