34 வது நாளாக தொடரும் யுத்தம்..!
இஸ்ரேலானது 34 வது நாளாக பாலஸ்தீனத்தின் மீது பலத்த தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.
இப் போரின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலியப் படைகள் பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றது.
மேலும் தெற்கு காசாவில் உள்ள இலக்கை குறிவைத்து இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கடவுளின் பெயரில் இந்த கோரிக்கையை விடுப்பதாகவும் பாப்பரசர் போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.இவரின் வார்த்தைக்கு இஸ்ரேலாறது எந்தளவு மதிப்பு கொடுக்கும் என்று தெரியவில்லை.
மேலும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான போரில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு ஐ.நா. உட்பட அரச சார்பற்ற நிறுவனங்கள் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் இஸ்ரேலானது இக்கருத்திற்கு செவி சாய்க்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.