அந்தாடிக்கா பனி பிரதேசத்தில் விமானம் தரையிறங்கி சாதனை..!
பனி என்றாலே ஒரு அழகு தான் ஆனால் அங்கு சென்று மனிதர்களால் வாழ முடியாது. அப்படியாப்பட்ட ஒரு பிரதேசம் தான் அந்தாடிக்கா,இப்பிரதேசமானது ஆய்வுக்காக மாத்திரமே பயன் படுத்தப்படுகிறது.இங்கு பல லட்ச வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மிருகங்கள்,தாவர்ஙகளின் படிமங்கள் போன்ற இன்னோரான விடயங்கள் தொடர்பாக ஆய்வுகள் நடைப்பெற்றுவருகிறது.
இதனை ஆய்வு செய்வதற்காக பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.இவ்விஞ்ஞானிகளை அழைத்து செல்லவும் மீண்டும் அழைத்து வரவும் இராணுவ விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் அந்தாடிக்கா பனிமலையில் ஒரு பயணிகள் விமானம் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் போயிங்-787 ட்ரீம்லைனர் எனும் விமானத்தை குயின்மவுட் லேன் எனும் இடத்தில் விஞ்ஞானிகள் தரையிறக்கி சாதனை படைத்துள்ளனர்.
குறித்த விமானமானது 45 விஞ்ஞானிகளுடன் மருந்து, உணவு பொருட்களுடனும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு சவாலானா கட்டத்தில் இந்த விமானத்தை மிக வெற்றிகரமாக விஞ்ஞானிகள் தரையிறக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது ஓடு பாதையானது 3 கிலோ மீற்றர் மற்றும் 200அடி அகலம் கொண்டது.பனிகட்டி என்பதால் விமானததை தரையிறக்குவது சவாலான காரியமாக காணப்பட்டது.ஏன் எனில் கட்டுப்பாட்டை இழந்தால் சறுக்கி சென்று பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளாகி விடும் என்ற நிலைமையில் .மிக நிதானமாக விமானத்தை இறக்கி சாதனை படைத்துள்ளனர் விஞ்ஞானிகள்.