எக்ஸ் செயலி மூலம் கிடைக்கும் வருமானத்தை பாலஸ்தீனிய மக்களுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிப்பு..!
எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க் எக்ஸ் செயலி மூலம் கிடைக்கும் வருமானத்தை போரின் காரணமாக பாதிப்படைந்த பாலஸ்தீனத்தின் வைத்தியசாலைகளுக்கும் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்க முன்வந்துள்ளார்.
இஸ்ரேல் ஆனது பாலஸ்தீனத்தின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக பாலஸ்தீனத்தில் அதிகளவான சிறுவர்களும் ,பெண்களும் உயிரிழந்தனர்.மேலும் உணவு,நீர்,மருத்துவம்,மின்சாரம் என்பன துண்டிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர். இந்நிலையில் தான் எலான் மாக்ஸ் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.