புதிய கால நிலை செயற்கை கோளை நாசா இன்று விண்ணில் செலுத்தியது..!
புதிய காலநிலை செயற்கைகோளை நாசா இன்று விண்ணில் செலுத்தியது.
கேப்க கனவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ரொக்கெட் மூலம் ஏவப்பட்டு ,சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
இது பூமியில் இருந்து 420 மைல்கள் உயரத்தில் பறந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு கடற்பகுதி மற்றும் வளி மண்டலத்தை ஆயவு செய்யும்.
இதில் 3 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.இரண்டு கருவிகள் மூலம் பூமி துல்லியமாக படம்பிடிக்கப்படும்.மூன்றாவது கருவி மூலம் மாதாந்திர அளவீடுகள் எடுக்கப்படும்.
வானிலை மற்றும் சூறாவளி முன்னறிவிப்புகளை துல்லியமாக வழங்கவும்,வெப்பநிலை அதிகரிக்கும் போது பூமியின் மாற்றங்களை குறிப்பிடவும் ,தீக்கு விளைவிக்க கூடிய பாசிகள் எப்போது பூக்கும் என்பதை கணிக்கவும் இந்த கோள் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.