பூமிக்கு அருகில் நீர் உள்ள கிரகத்தினை கண்டுப்பிடித்தது நாசா..!

பூமிக்கு மிக அருகில் இருக்கும் கிரகத்தில் நீர் இருக்கும் கிரகம் ஒன்றை நாசா கண்டுப்பிடித்துள்ளது.இதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட நீர் மூலக்கூறுகள் இருக்கும் கிரகங்களை விட இந்த கிரகம் மிக அருகில் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைதூரத்தில் உள்ள ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்திருப்பதை நாசா கண்டுப்பிடித்துள்ளது.

ஹப்பிள் ஸ்பேஷ் தொலைநோக்கி இதனை கண்டுப்பிடித்துள்ளது.ஜிஜே9827 என்று குறிப்பிடப்படும் இந்த கிரகம் பூமியை விட இரண்டு மடங்கு பெரியதாக காணப்படுகிறது.இதில் அதிகமான நீர்மூலக்கூறுகள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நீர் மூலக்கூறுகளோடு நீராவியும் கலந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக உறைந்த பனிக்கட்டிகள் அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *