பூமியை நோக்கி வெற்றிகரமாக வந்துக்கொண்டிருக்கிறது நாசாவின் ‘ஓசிரிஸ’

விண்வெளித்துறையில் பல நாடுகள் தங்களுடைய தடத்தை தக்க வைத்துக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டு நின்கின்றன. இந்த வகையில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்திருக்க கூடிய நாசாவின் ஓசிரிஸ் ரெக்ஸ் ஆனது எதிர்வரும் 24 ம் திகதி பூமியை வந்தடையும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

2016 ம் ஆண்டு செப்டெம்பர் 8ம் திகதி பென்னு என்ற விண்கல்லை ஆய்வுசெய்வதற்காக நாசா அனுப்பி வைத்திருந்தது.பென்னு விண்கல்லில் இருந்து 60 கிராம் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதே இதன் பிரதான நோக்கமாக காணப்படுகிறது.

இதன் மூலம் சூரியக்குடும்பத்தின் தோற்றம்,அதன் பரிணம வளர்ச்சி,கோளுருவாக்கம்,புவியில் உயிர்களின் தோற்றத்தை நிர்ணயிக்கும் சேர்மங்களின் மூலம் போன்ற இன்னோரான விடயங்களை ஆய்விற்குட்படுத்தவுள்ளனர்.

ஓசிரிஸ் விண்கலமானது 2 ஆணடுகள் , 2 கோடி தூரம் பயணித்து பென்னு விண்கல்லை 2018ம் ஆண்டு டிசம்பர் 03 திகதி பென்னுவை அடைந்தது. எனினும் அங்கு தரையிறங்காமல் இயந்திர கையை கொண்டு விண்கல்லின் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறது.

எனினும் பூமியை 24 ம் திகதி வந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது.
விண்கலம் பூமியின் வளிமண்டலத்தை நெருங்கியதும், பூமியில் இருந்து 63,000 மைல்களுக்கு மேல் இருந்து கேப்ஸ்யூலை வெளியிடும்.

தரையில் கேப்ஸ்யூல் இறங்குவதற்கான இலக்கு 250 சதுர மைல்கள் சுற்றளவு என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. விண்கலத்தில் இருந்து புறப்பட்டு பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் கேப்ஸ்யூல் வரும்போது அதிகப்படியான வெப்பம் காரணமாக நெருப்பு பந்துபோன்று காணப்படும் எனவும் அந்த வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் கேப்ஸ்யூலை வெப்ப கவசம் மூடியிருக்கும் எனவும் பூமியை நெருங்கியதும் கேப்ஸ்யூலில் இருந்து பாராசூட் ஓபன் ஆகும் எனவும் அதன்மூலம் கேப்ஸ்யூலின் வேகம் குறைந்து பூமியில் நிர்ணயிக்கப்பட்ட பகுதிக்குள் விழும் எனவும்கேப்ஸ்யூல் விழும் இடத்தை துல்லியமாக கண்டறிவதற்காக விமானப்படையினர் ரேடார் மற்றும் கேமராக்களைப் பயன்படுத்தி கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்ஸ்யூல் விழுந்ததும் மீட்புக் குழு அங்கு சென்று கேப்ஸ்யூலை பத்திரமாக மீட்டு முதலில் அந்த கேப்ஸ்யூல், ஹெலிகாப்டர் மூலம் முகாமில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, தேவையற்ற வாயு மற்றும் ஈரப்பதம் நீக்கப்படும். பின்னர் மறுநாள், விமானம் மூலம் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாசாவானது இன்னுமொரு வெற்றியினை பதிவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *