தென் கொரியாவுடனான தொடர்பை துண்டித்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது..!
சமீப காலமாக கொரிய தீபகற்பம் பதற்றமான சூழ்நிலையாக மாறிவருகிறது.
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகின்றார்.இதற்கு எதிராக தென்கொரியா ,அமெரிக்கா,ஜப்பான் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து கடந்த மாதம் அளவில் கூட்டுப்பயிற்சியில் ஈடுப்பட்டன.
இதனிடைய வடகொரியாவானது தென்கொரியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை முறித்துக்கொள்வதாக வடகொரியா அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சென்று பார்வையிட்டார்.இதன் போது தென.கொரியாவுடன் தூதரக உறவை தொடரவோ,பேச்சு வார்த்தை நடத்தவோ விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.