ஈரானின் இடைகால ஜனாதிபதியாக முஹமது முக்பர் தெரிவு…!
அசர்பைஜானில் அமைக்கப்பட்ட அணை திறப்பிற்காக சென்ற ஈரானிய ஜனாதிபதி அங்கு சென்று திரும்பும் நிலையில் ,வர்சகான் மற்றும் ஜோல்பா இடையேயுள்ள மலைப்பகுதியில் அவர் பயணித்தி ஹெலிகொப்டர் மாயமான நிலையில் ,குறித்த ஹெலிகொப்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பகுதியில் தேடுதல் நடைப்பெற்றது.
இதனையடுத்து ஈரானின் கிழக்கு அசர்பைஜானின் தப்ரிஸ் நகரின் உள்ள டவில் கிராமத்திற்கு அண்மையிலுள்ள மலைபகுதியில் அவர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து இந்த பதவிக்கு இடைக்கால ஜனாதிபதியாக தற்போதைய துணை ஜனாதிபதி முஹமது முக்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பின் பிரகாரம் முதல் பதிப்பின் 130 மற்றும் 131 வது சரத்துக்கமைய குறித்த பதவி சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் 50 நாட்களில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைப்பெறும் என அரசியலமைப்பு சட்டம் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை ஜனாதிபதி இப்ராஹிம் ரைசின் மறைவை ஒட்டி 5 நாட்கள் ஈரானில் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.