உக்ரேனுக்கு கொடுக்கும் ஆதரவு குறையாது – இமானுவேல் மக்ரோன்

பிரெஞ்ச் உக்ரேனுக்கு கொடுக்கும் ஆதரவு என்றும் குறையாது என பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.


இரண்டாம் உலகப்போரின் மிகப்பெரும் முக்கிய அம்சமாகப்பார்க்கப்படும் , நட்புநாடுகளிலிருந்து பிரான்ஸ்ஸை நோக்கி வந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் வருகையை நினைவுகூரும் D Day ல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைத்தெரிவித்தார்.


குறித்த நினைவஞ்சலி நிகழ்ச்சியானது பிரான்ஸின் நோர்மண்டி நகரில் அனுஷ்டிக்கப்பட்டது.

80 வது ஆண்டாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் ரஸ்யா அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் முக்கிய அம்சமாகும்.
அதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜோ பைடன் , உலகத்தின் ஜனநாயகம் கேள்விக்குறியாகி ஆபத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இரண்டாம் உலகப்போரின் முக்கிய திருப்புமுனையாக ,1944 ம் ஆண்டு  June 6 ம் திகதியன்று  பிரான்ஸை , ஜேர்மனிய படைகளிடம் இருந்து காப்பாற்ற வந்த நட்பு நாடுகளின் வீரர்களை நினைவேந்த அனுஷ்டிக்கப்படும் நிகழ்ச்சியே D-day என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *