டில்லியில் இன்று மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார் நரேந்திரமோடி
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது தடவையா மீண்டும் இன்று நரேந்திரமோடி பதவியேற்கவுள்ளார்.
இன்று இந்தியநேரம் மாலை 7 15 மணிக்கு ராஸ்ட்ரதி பவனில் பதவியேற்கவுள்ளதோடு, அவரின் அமைச்சர்களும் அடுத்தடுத்து பதவியேற்கவுள்ளனர்.

இன்றைய இந்த நிகழ்ச்சிக்காக பாரதீய ஜனதா மற்றும் கூட்டணிக்கட்சிகள் பலவும் டில்லியை நோக்கி படையெடுத்துள்ளன.
அதேவேளை டில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சார்க் நாடுகளின் தலைவர்களும் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.