தொடரும் பணிப்புறக்கணிப்பு|பயணிகள் படும் கடும்சிரமம்

சிறீலங்கா புகையிரத சாரதிகளினால் தொடங்கப்பட்ட  பணிப்புறக்கணிப்பு, June 10 ம் திகதியான இன்றும் நான்காவது நாளாக தொடர்வதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.


பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தவண்ணம் இருப்பதால் இன்று மட்டும்  20க்கும் மேற்பட்ட அலுவலகப் பணிகளை ரத்து செய்யப்பட வேண்டி ஏற்பட்டதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத சாரதிகளின் வகுப்பு நிலை 2 பதவி உயர்வு வழங்குவதில் இருக்கும் தாமதம் மற்றும்  புதிய ஆட்களை உள்வாங்குவதற்கான தாமதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத பணியாளர்களால் தொடர்ச்சியாக  இந்த பணிப்புறக்கணிப்பு  இடம்பெற்று வருகிறது.

இந்த புறக்கணிப்பால்
புகையிரத நிலையங்கள் பலவும் இன்று வெறிச்சோடி காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் ஓடும் புகையிரதங்களில் கடும் நெரிசல்களாலும் பயணிகள் கடும் அவதியுறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *