வாரிசு அரசியலுக்கு இடம் கொடுத்த மோடியின் தேசிய ஜனநாயகக்கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் அரசியல் வாரிசுகளுக்கு அதிகம் இடம் கொடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் எதிர்கட்சித் தலைவராகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர், ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 20 வாரிசுகளுக்கு தேசிய ஜனநாயகக்கூட்டணி இடம் என்றும் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
ஏற்கனவே எதிர்கட்சிகள் மீது வாரிசு அரசியல் என விமர்சித்தவர் இந்தியப்பிரதமர் மோடி.
ஆனால், இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையிலேயே வாரிசுகள் நிரம்பியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
அவரின் பேச்சுக்கும் செயல்பாடுகளுக்கும் உள்ள வித்தியாசத்திற்கு மோடி இனி என்ன பதில் சொல்லப்போகிறார்?”
என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேலும் விமர்சித்துள்ளார்.