மும்பாயில் தனது தளபாடப் பல்பொருளங்காடியைத் திறந்துவைக்கிறது ஐக்கியா [IKEA] நிறுவனம்.

இந்தியாவின் ஹைதராபாத்தில் முதலாவது அங்காடியை 2018 இல் ஆரம்பித்தபின் 2019 முதல் மும்பாயில் இணையத்தளம் மூலம் தமது பொருட்களை விற்க ஆரம்பித்த சுவிடிஷ் தளபாட நிறுவனமான ஐக்கியா நவி மும்பாயில் ஐந்து லட்சம் சதுர மீற்றர் அளவில் தனது இரண்டாவது இந்திய அங்காடியை டிசம்பர் 18 ம் திகதியன்று திறந்துவைக்கவிருக்கிறது. 

30 நாடுகளில் 378 அங்காடிகளைக் கொண்டிருக்கிறது ஐக்கியா நிறுவனம்.

சுவீடன் நாட்டின் கோட்பாடுகளிலொன்றான ஆண் – பெண் சமத்துவத்தைத் தனது வியாபார நிறுவனங்களிலும் நிறைவேற்றும் ஐக்கியா 1,200 தொழிலாளர்களுடன் ஆரம்பிக்கவிருக்கும் அங்காடியில் ஐம்பது விகிதமானவர்கள் பெண்களாக இருக்கும் என்று தெரிவிக்கிறது. 2030 இல் சுமார் 6,000 பேர்களுக்கு வேலை கொடுக்கத் திட்டமிட்டிருக்கும் அந்த அங்காடியில் தொடர்ந்தும் பெண்கள் விகிதம் 50 ஆக இருக்கும் என்று குறிப்பிடுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *