புகையிரத சேவை வழமைக்குத் திரும்பியது | திணைக்களம் அறிவிப்பு
சிறீலங்காவில் இன்று முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியது என புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பதவி உயர்வு மற்றும் புதிய பணியாளர்களை உள்வாங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தொடங்கிய இந்த பணிபகிஸ்கரிப்பு, நேற்றையநாள் இடம்பெற்ற கலந்துரையாடல் முடிவுகளின் படி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் புகையிரத திணைக்கள முகாமையாளர் வழங்கிய எழுத்துமூல உறுதிமொழியின் பின்னரே போராட்டம் நிறைவுக்கு வந்திருக்கிறது.
அதன்படி இன்று காலை முதல் புகையிரத சேவைகள் வழமை போன்று இயங்கத்தொடங்கியுள்ளது எனவும் புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இன்திபோலகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் புகையிரத சேவைகளை, அதன் தேவையற்ற மறுசீரமைப்புகளுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு கடும் எதிர்ப்புடன் கருத்து வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று வெளியான செய்தி இது 👇