அதிக வரி குறைப்பு | இதுதான் ரிஷி சுனக் போட்ட தேர்தல் கடைசி ஆயுதம்
தேர்தல் கருத்துக் கணிப்புகளின் படி ரிஷி சுனக் அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளன நிலையில், தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதிக வரிக் குறைப்புகளை வழங்கப்போவதாக ரிஷி சுனக் உறுதியளிக்கிறார்.
அதேவேளை வரும் ஜுலை 4 தேர்தலில் தொழிலாளர் கட்சி வென்றால், இப்பொழுது எட்டியிருக்கும் பொருளாதார மீட்சியைத் தடம்புரளச் செய்யும் என்றும் ரிஷி மேலும் தெரிவிக்கிறார்.
அத்துடன் தான் பிரதமராக தெரிவானால் , உழைக்கும் மக்களுக்கு 17 பில்லியன் பவுண்ட்ஸ்கள் வரிக்குறைப்பு செய்வேன் எனவும் ரிஷி உறுதியளிக்கிறார்.
ஏற்கனவே பிரிட்டனின் ஜூலை 4 தேர்தலில் ரிஷி சுனக் பெரும் தோல்வியடையப்போகிறார் என்ற கருத்துக் கணிப்புகளை முறியடிப்பதற்கான கடைசி ஆயுதமாகத்தான் இந்த வரிக்குறைப்பு அறிவிப்பு எல்லாம் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கொன்சவேட்டிவ் கட்சியின் குறித்த தேர்தல் விஞ்ஞாபனமானது வரிக்குறைப்பை மையமாகக்கொண்டது தொழிற்கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும் தொழிற்கட்சியின் தலைவர் கியர் ஸ்டார்மரும் தனது கட்சி முக்கிய வரிகளை உயர்த்தாது என்று தெரிவித்திருக்கிறார்.