இங்கிலாந்து ஓமானை அபாரமாக வென்றது
T20 உலகக்கிண்ண குழுநிலைப்போட்டிகளில் இன்று நடைபெற்ற இன்னுமொரு போட்டியில், இங்கிலாந்து அணி ஓமான் அணியை 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, ஓமான் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய ஓமான், மளமளவென விக்கெட்டுக்களை இழந்து , 13.2 ஓவர்களில் 47 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் Adil Rashid மிக திறமையாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 11 ஓட்டங்களைக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3.1 ஓவர்களிலேயே, 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை எட்டி அபார வெற்றியீட்டியது.
இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக அபார பந்துவீச்சாளர் Adil Rashid அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் பின்னரும் இங்கிலாந்து அணித்தரவரிசையில் 3 வது இடத்திலேயே இருக்கிறது என்பதும் முதலிரண்டு இடங்களிலும் அவுஸ்ரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது .