தபால் ஊழியர்களும் போராட்டம்| தொழிற்சங்க நடவடிக்கை துவக்கம்
இலங்கை தபால் ஊழியர்களும் தொழிற்சங்க போராட்டமொன்றை நேற்றிரவு ( ஜூன் 12) துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக தபால் திணைக்களத்தில் காணப்படும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளை சரிவர முன்னெடுப்பதில் இடையூறுகள் இருப்பதாகவும் அதனை சீர்திருத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியே இந்தப்போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
உயரதிகாரிகளிடமுமிருந்து எந்தத்தீர்வும் கிட்டாத நிலையில் போராட்டம் துவங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது