BRICS எதிர் G7 நாடுகள் | இதுவே இனி உலக அரசியல்

எழுதியது : இதயச்சந்திரன்

G20 மாநாட்டிலும் இதே முடிவு எட்டப்பட்டது. ஆனாலும் காசா போர் இந்த வழித்தடத்தில் சிக்கலை ஏற்படுத்தியது. அப்பிராந்தியத்தில் இன்னமும் ஹவுதிகளின் தாக்குதல்கள் நீடிக்கிறது.

சீனாவின் Belt & Road இற்கு எதிரான நகர்வு இதுவென மேற்குலகம் இந்தியாவிற்கு புது விளக்கம் கொடுத்தாலும், BRICS+ ஐ பலவீனப்படுத்த போடப்படும் திட்டமெனத் தெரிகிறது.

இருப்பினும் சவுதி அரேபியாவின் ஆதரவு இல்லாமல் இந்த EC வழித்தடத்தை உருவாக்க முடியாது.
கடந்த 9ஆம் திகதி Petro-Dollar ஆதிக்கம் முடிவிற்கு வந்தது.
இதுவும் பெரும் நெருக்கடியை அமெரிக்க டொலர் மீது செலுத்தும்.

தற்போது நடைபெறுவது பிரிக்சிற்கும் G7 நாடுகளுக்கு இடையிலான பொருளாதார-இராணுவ பனிப்போர்.

இதில் Global South இன் முக்கிய நாடான ரஷ்ய சார்பு இந்தியாவை தமது பக்கம் முழுமையாக இழுப்பதற்கு சீன எதிர்ப்பினை பயன்படுத்துகிறது மேற்குலகம்.

பிரிக்சின் ஆரம்ப உறுப்பு நாடான இந்தியாவும் இந்த வருடம் இணைந்த சவுதியும், நவீன இருதுருவ அரசியலின் போக்கினைத் தீர்மானிக்கப் போகின்றன.

பிரிக்ஸ் அணி விரிவடைகிறது.
Moscow Stock Exchage தனது முதன்மை புழக்க நாணயமாக சீன யுவானை (Renminbi) அங்கீகரித்துள்ளது. தன்னுடன் செய்யும் வர்த்தகத்தை யுவான் மற்றும் ரூபிளில் மேற்கொள்ளுமாறு ரஷ்யா நிபந்தனை விதிக்கிறது.

ரஷ்ய-சீன-சவுதி இடையிலான கைத்தொழில் உயர் தொழில் நுட்ப படைத்துறை உறவுகள் அதிகரிக்கின்றன. முதலீடுகளும் முன்னெப்பொழுதும் இல்லாதவகையில் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது நடைபெறும் உக்ரேனின் சமாதான (?)மாநாடும், ஓருவகையில் மேற்குலகப் பின்புலத்தில் உலக நாடுகளை தம்பக்கம் இழுக்கும் முயற்சிதான்.

ஆக மொத்தம் ஒரு விடயத்தை உன்னிப்பாகக் கவனிக்கலாம்.

அதாவது பாரிய சந்தை ஒன்றினை கைப்பற்ற முடியாவிட்டால், முதலில் அச்சந்தை நாட்டின் Supply chain அழிக்க வேண்டும்.
அதுவும் சாத்தியப்படாவிட்டால் அந்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் மீது 100 வீத வரி சுமத்தப்படும்.

அந்த வரி, மக்கள் மீதே சுமத்தப்பட்டு பணவீக்கமும் அதிகரிக்கும்.
தற்கால உலக ஒழுங்கின் நிதி-நிர்வாக பரிவர்த்தனைக் கட்டமைப்புகள் ஒரு சில கண்டங்களுக்குள் முடக்கப்படும் நிகழ்வுகள் நடைபெறும் சாத்தியமுண்டு.
புதிய எண்மிய நாணயம் ஒன்றின் உருவாக்கம் தவிர்க்க இயலாதது போல் தெரிகிறது.

(15/6/2024)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *