லண்டன், குறொய்டன் நாகபூஷணி அம்மன் தேர்

லண்டனில் , குறொய்டன் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (20/06/2024) மாலை வேளை இடம்பெறவுள்ளது.

குறித்த தேர்த்திருவிழாவானது குறொய்டன் பிரதான வீதியில் ஸ்ரீநாகபூக்ஷணி தேரேறி வீதியுலா வரும் காட்சியாக இடம்பெறவுள்ளது.


தமிழ் மக்கள் பலரும் வாழும் குறொய்டன்,  மற்றும் சுற்றுவட்டார நகர தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுகூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 12 ம் திகதி கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழா, 21 ம் திகதி தீர்த்தத் திருவிழாவும் , 22 ம் திகதி பூங்காவனத் திருவிழாவுடனும் நிறைவுக்குவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *