வடமாகாணம் வென்றது தங்கம்| தேசிய மட்ட உதைபந்தாட்டம்

தேசிய மட்டத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில், விறுப்பாக நடைபெற்ற  உதைபந்தாட்டப் போட்டியில், வடமாகாண அணி தங்கப்பதக்கத்தை வென்றது.

இறுதிப்போட்டியில் மத்தியமாகாண அணியை எதிர்த்து வடமாகாண அணி மோதியது.
போட்டியின் முதற்பாதியில் ஆதிக்கம் செலுத்திய மத்தியமாகாண அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
அதனைத் தொடர்ந்து இன்னும் உத்வேகத்தோடு ஆடத்தொடங்கிய வடமாகாண அணி பல்வேறு வாய்ப்புக்களை தவறவிட்டிருந்தாலும்,  நிறைவில் ஒரு கோல் அடித்து போட்டியை சமனிலைப்படுத்தியது.


அதன்படி ஆட்ட நிறைவில் இரு அணிகளுக்கும் வழங்கப்பட்ட பனால்றிகளில் வடமாகாண அணி, 6-5 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது.

ஆட்டத்தில் பனால்ற்றி கோல்களில் மூன்றை , சாதுரியமாக பாய்ந்து தடுத்த வடமாகாண கோல் காப்பாளர், பருத்தித்துறை ஹாட்லியின் , ஆர்ணீகன், வெற்றிக்கு முக்கிய காரணமானார்.
இதன்மூலம் வடமாகாண அணி தொடர்ச்சியாக தேசிய சம்பியன்களாக தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *