ரோக்கியோவில் நிலநடுக்கம்|சுனாமி எச்சரிக்கை இல்லை
ஜப்பான் நாட்டின் (Japan) தலைநகர் டோக்கியோவில் (Tokyo) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
டோக்கியோவின் 23 பிரதேசங்களில் இந்த நடுக்கம் உணரப்பட்டுள்ளது என்பதைடு , சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
மேலும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.