லண்டனில் வல்வை கோடைவிழா
ஐக்கியராச்சிய வல்வை நலன்புரிச்சங்க ஏற்பாட்டில் , வல்வை கோடைவிழா வரும் ஜூலை மாதம் 7 ம்திகதி ஞாயிற்றுக்கிழமை , லண்டனில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
17 ம் ஆண்டாக மிகப்பெரியளவில் இடம்பெறும் இந்த கோடைவிழாவில் ஐரோப்பிய மற்றும் கனடாவிலிருந்து பங்குபற்றும் அணிகள் உதைபந்தாட்டப்போட்டியில் பங்குபற்றவுள்ளன.
வெற்றிக்கிண்ணத்துடன் வெற்றிக்கான பரிசுத்தொகையையும் சேர்த்தே வழங்கும் இந்த சுற்றுப்போட்டி, இறுதிப்போட்டிவரை விறுவிறுப்பாகத்தான் இருக்கும்.
உதைபந்தாட்டப் போட்டிகள் ஒருபுறம் நடக்க , ஏனைய விளையாட்டுக்களுக்கான போட்டிகளும் சமநேரத்தில் நடக்கும்.
முழு நாள் நிகழ்ச்சியாக நடக்கும் இந்த மைதான விழா , Croydon இல் அமைந்துள்ள Roundshaw Players field மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விபரங்கள் கீழே உள்ள இணைப்பில் 👇