உமா குமரன் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரானார்
பிரித்தானிய வரலாற்றில் முதல் ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக உமா குமரன் தெரிவானார்.
தொழிற்கட்சி சார்பில் Stratford and Bow தொகுதியில் போடாடியிட்ட உமா குமாரன் 19,145 வாக்கு பெற்று வெற்றிபெற்றார்.

தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட அனைவரையும் முந்தி அதிகூடுதல் வித்தியாசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார்.
அவரது தொகுதியில் வழங்கப்பட்ட மொத்த வாக்குகளில் 44 சதவீத வாக்குகளை அவர் அள்ளியிருக்கிறார்.

ஈழத்தமிழ் பெண்ணாக முதற்தடவையாக நாடாளுமன்றம் செல்லும் உமா குமரனை எல்லோரும் மகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.
ஆட்சியை அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றிய தொழிற்கட்சியின் சார்பில் முதற்தடவையாக, ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையுடன் நாடாளுமன்றம் செல்லவுள்ளார் உமா குமரன் என்பது குறிப்பிடத்தக்கது.