போதனா சிவானந்தன்|பிரித்தானிய மிக இளவயது சர்வதேச வீரராக சாதனை

பிரித்தானியாவிலிருந்து சர்வதேசப்போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களில் ஒருவராக ஈழத்தை பூர்வீகமாகக்கொண்ட போதனா சிவானந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை பிரித்தானிய நாட்டுக்காக சர்வதேசரீதியில் பங்குபற்றும் மிக இளவயது வீரர் என்ற சாதனையையும் தனதாக்கிக்கொண்டார்.


ஹங்கேரியில் நடைபெறும் 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரின் பிரித்தானிய குழுவில் போதனா இணைக்கப்பட்டுள்ளுதன் மூலமே இந்த சாதனை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த இந்த போட்டித்தொடர் வரும் செப்ரெம்பர் மாதம் 10ம்திகதி முதல் 23 ம் திகதிவரை Hungexpo Exhibition and Conference Centre அரங்கில் இடம்பெறவுள்ளது.
ஈழத்தமிழர் என்ற அடையாளத்துடன்  பித்தானியாவில் பிறந்து வளர்ந்த போதனாவின் செஸ் விளையாடும் நுட்பத்திறனை  பிரித்தானிய அரசாங்கம்  உட்பட பல விற்பன்னர்கள் பாராட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


அத்தோடு குறிப்பிட்ட போட்டியில் ஒரு பட்டத்தை வெல்வேன் என்று சொல்லும் போதனா, சிறுமியாக ஒரு பலருக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *