உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் செய்தி..!
அதிகளவான மழையின் காரணமாக கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக பலர் காணமல் போயிருந்ததுடன் பலர் உயரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்திருந்தது.மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.எனினும் அதிகளவான வெள்ளம் காரணமாக மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ் இயற்கை அனர்த்தத்தில் பலியான மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.
கேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்களிடம் இரங்கல்களை ஏற்றுக்கொள்ளும்படியும்.உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இரக்கம் மற்றும் ஆதரவான வார்த்தைகளை தெரிவிக்கவும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவிக்கவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரஷ்ய நாடுகளுக்கிடைய மிக நீண்ட கால நட்பு நிலவிவருகிறது.இந்நிலையில் எந்த ஒரு இன்பத்திலும் துன்பத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த செய்தியும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.