காலத்தை அளக்கும் கருவியா..?
📆📆📆📆📆📆📆📆📆📆📆 *நாள்காட்டி* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
📆📆📆📆📆📆📆📆📆📆📆
காலம்
முகம் பார்த்துக் கொள்ளும்
கண்ணாடி….
சுவற்றுச் சிலுவையில்
அறையப்பட்டது…
ஆண்டுக்கொரு முறை
உயிர்த்தெழும் …
பிறக்கும்
முதல் நாள் மட்டும் கலர் ஆடை…..
மற்ற நாட்கலெல்லாம் கருப்பு வெள்ளை ஆடைதான்…
தினம் தினம்
துயில் உரிக்கப்படுகிறது
கண்ணன் வரவேயில்லை….
பணம் வாங்காமல்
சோசியம் சொல்லும்
சோதிடர்….
இது பிறந்த உடன்
ஆசையாக
பார்க்க வருவார்கள்
அரசு விடுமுறை நாட்களை….
இது
மதத்தைக் கடந்தது
எல்லா விழாக்களையும்
கொண்டாடும்….
இது ஒரு
மிகப்பெரிய ஞானி
நல்ல நேரத்தை
சிரிப்பதும் இல்லை
கெட்ட நேரத்தில்
அழுவதுமில்லை….
இந்த உலகிலேயே
பிறக்கும் போதே!
இறக்கும் தேதியும்
தெரிந்தது இதற்கு மட்டும்தான்…
இது காலத்தை
அளந்து சொல்லும்
அளவுகோல்……
ஏதாவது
செய்து கிழித்தவர்களை விட
எதுவும் செய்யாமல்
இதைக்
கிழித்தவர்கள் தான் அதிகம்…. *கவிதை ரசிகன்*
📆📆📆📆📆📆📆📆📆📆📆