ரஷ்யா வடகொரியாவிற்கு எதை வழஙகியது..!
ரஷ்யா உக்ரைன் போரானது இருவருடங்களுக்கு மேலாக நடைப்பெற்றுவருகிறது. இந்நிலையில் உக்ரைனிற்கு அமெரிக்கா முழுமையான ஆதரவினை வழங்கிவருகிறது. ஆயுதம் , பணம் என அனைத்து விதங்களிலும் உதவிவருகிறது.
இந்நிலையில் வடகொரியாவானது உக்ரைன் உடனான போரிற்கு ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும் அதற்கு பரிசாக ரஷ்ய ஜனாதிபதி புடின் வட கொரிய ஜனாதிபதிக்கு குதிரைகள் வழங்கியுள்ளார் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.ஓர்லோவ் டிராட்டர் வகையை சேர்ந்த 24 குதிரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் குதிரைகள் என்றால் மிக விருப்பப்படுவார் என்றும்.இரண்டு வருடங்களுக்கு முன்பாக 30 குதிரைகளை பரிசாக அனுப்பிவைத்துள்ளார் என்றும்.இந்த பரிசுகள் வட கொரியாவால் அனுப்பப்பட்ட ஆயுதங்களுக்கான பரிசுகள் என்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
எனினும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு வடகொரியாவால் ஒரு ஜோடி நாய்கள் அனுப்பப்பட்டதாகவும் ,அதற்கு பதிலாக ஓகஸ்ட் மாதம் அளவில் வடகொரிய ஜனாதிபதிக்கு ரஷ்ய ஜனாதிபதி 447 ஆடுகளை வழங்கியதாகவும் வடகொரியாவின் அரசு ஊடக நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.