புலமை பரீட்சைக்கு என்ன என்ன கொண்டு செல்ல முடியும்..!
நாளைய தினம் 2024 ம் ஆண்டுக்கான புலமை பரீட்சை நடைபபெறவுள்ளது. இதற்கமைய நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 23,879 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இவர்கள் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.இதே வேளை 07 பரீட்சை நிலையங்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக நிறுவப்பட்டுள்ளது.
இந்த பரீட்சை நாளை காலை 9.30 முதல் 10.45 வரை நடைப்பெறும்.அதன் பிறகு முதலாம் பகுதி காலை 11.15 மணிக்கு ஆரம்பமாகும்.
இதே வேளை கருப்பு நிற பேனா அல்லது நீல நிற பேனா பயன்படுத்தலாம்.பென்சில் பயன் படுத்தலாம். இதனை தவிர வேறு நிற பேனாக்கள் பயன்படுத்த முடியாது.
மேலும் ஸ்மார்ட் கைகடிகாரங்கள்,கோப்பு அட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அழிப்பான்,அடிமட்டம்,தண்ணீர் போத்தல் ஆகியவற்றை பரீட்சை நிலையத்தினுள் கொண்டு செல்ல முடியும்.